எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டே இருக்கு!! போன் நோண்டி பரிதாபங்கள்..
மீம்ஸ் புகைப்படங்கள்
மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டும் அல்ல மரியாதையும் தீர்மானிப்பது பணம் தான். அதனால் தான் மக்கள் அதனை தேடி இடைவிடாது ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தில் தங்கள் மதிப்பை நிலைநிறுத்துக்கொள்ள வேண்டுமானால் கையை மீறி செலவு செய்து விடுகிறார்கள்.
அதனால் ஒவ்வொரு மாதமும் எப்போது சம்பளம் வரும் என்ற எதிர்ப்பார்ப்போடு மாத இறுதியில் வேதனைப்படுவார்கள். வந்த சம்பளமும் உடனே காலியாகிவிடுவதால் கையில் பணம் இல்லை என்று புலம்புவார்கள்.
அப்படி சமூகவலைத்தளங்களில் பணத்தை வைத்து புலம்பியபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்கள் நெட்டிசன்கள். இப்படி ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பற்றி கவலைப்படாமல் போனையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர்.
அவர்களை வைத்து என்ன ஜென்மம் இது..எவ்ளோ பிரச்சனை இருக்கு..எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டே இருக்கு என்று கூறி கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்...













