படப்பிடிப்பில் தகாத வார்த்தையை பயன்படுத்திய கவின்.. மிரட்டிய ஃபைட் மாஸ்டர்

Kavin
By Kathick Feb 11, 2025 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன்பின் லிப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் கைவசம் தற்போது Hi, கிஸ் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் கவின், நடந்துகொண்ட விஷயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் தகாத வார்த்தையை பயன்படுத்திய கவின்.. மிரட்டிய ஃபைட் மாஸ்டர் | Stunt Master Angry On Kavin Because Of Misbehave

படப்பிடிப்பு தளத்தில், ஒரு காட்சியில் பைக் ஓட்டி வரும் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர், கவினை இடிப்பதுபோல் வந்தாராம். இதனால் கடுப்பான கவின், அந்த ஸ்டண்ட் கலைஞரை தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டிவிட்டாராம்.

தனது ஸ்டண்ட் கலைஞரை ஹீரோ கவின் திட்டயத்தை அறிந்த ஸ்டண்ட் மாஸ்டர் தில் சுப்புராயன், உடனடியாக கவினை அழைத்து, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பது போல் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.