சூர்யா ரசிகர்களின் நிம்மதியை தொலைத்த பாலாபிரச்சனை.. இந்த பிரபலம் சொன்னா உண்மையா தான்

Suriya Krithi Shetty Bala
By Edward Aug 12, 2022 08:15 PM GMT
Report

லெஜண்ட் இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக இருந்து பின் சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களின் வெற்றியை கண்டவர் இயக்குனர் பாலா. இதன்பின் எடுத்து சில படங்கள் வெற்றியை பெற்ற நிலையில் பல கஷ்டங்களையும் இடையில் அனுபவித்து வந்துள்ளார் பாலா.

வாய்ப்பில்லை மனைவியுடன் விவாகரத்து என்று இருந்த பாலா, விவாகரத்துக்கு பின் சூர்யாவுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு வணங்கான் என்ற படத்தில் இணைந்துள்ளார். சூர்யா தயாரித்து நடித்து வரும் இப்படத்தில் தெலுங்கு இளம் நடிகை கிரித்தி செட்டி நடித்து வருகிறார்.

சூர்யா ரசிகர்களின் நிம்மதியை தொலைத்த பாலாபிரச்சனை.. இந்த பிரபலம் சொன்னா உண்மையா தான் | Stunt Master Silva Speaks About Suriya Bala Issues

சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா - பாலா இடையே சண்டை ஏற்பட்டதாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவியது. வாய் சண்டையில் பாலா மோசமாக சூர்யாவிடம் நடந்து கொண்டதாகவும் பிரச்சனை முற்றி சூர்யா சென்னை கிளம்பியதாகவும் கூறப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து சூர்யா விரையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகும் என்று தெரிவித்தார். இதன்பின்னும் படப்பிடிப்பும் இன்னும் ஆரம்பிக்காததால் சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை கொடுத்துள்ளதாம்.

இடையில் சூர்யா சிறுத்தை சிவா படத்தினை முடித்துவிட்டு பாலா படத்தின் வணங்கா ஷூட்டிங்கை தொடரலாம் என்று சூர்யா சொன்னதாக செய்திகள் வைரலாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றும் மாஸ்டர் சில்வா சமீபத்திய பேட்டியில் பாலா - சூர்யாவுக்கு இடையே என்ன நடந்தது என்று கூறியுள்ளார்.

இருவருடனும் பணியாற்றுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. வணங்கான் படத்தில் சூர்யா - பாலாவுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு சண்டைக்காட்சிகள் தான் முடித்துள்ளோம், ஷூட்டிங்ல எந்த மாற்றமு இல்லாமல் சென்று கொண்டிருக்கிரது. ரசிகர்கள் நிம்மதியாக இருக்க இப்படியாக பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சில்வா மாஸ்டர்.