முதலிரவு காட்சி..என் மகன் திட்டிட்டான்!! இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட சுப்பிரமணியபுரம் நடிகை தனம்
சுப்பிரமணியபுரம்
தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் முக்கிய கல்ட் கிளாசிக் பட காட்சிகள் இன்றும் கொண்டாடப்படும். அப்படி மைக் செட் ராசாத்தி ரோலில் நடித்த திண்டுக்கல் தனம், அப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், அப்படத்தில் நடிக்க அலெக்ஸ் என்பவரிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. உடனடியாக பாரதிபுரம் வாங்க என்று சொன்னதும் ஒரு சுமோ காரில் சென்றுள்ளார். அப்போது தாடியுடன் ஒருவர் தனம் இறங்கி வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததும் இவர் என்ன கேடி மாதிரி இருக்கிறார் என்று தனத்திற்கு தோன்றியுள்ளது. அதன்பின் இவர் தான் இயக்குநர் சசிகுமார் என்று பக்கத்தில் இருந்தவர் கூறியிருக்கிறார்.
அப்போது மனசில் சின்ன நெருடல் இருந்துள்ளது. முதல் நாளிலேயே திருவிழா காட்சிகள் என்பதால் அடுத்த நாளே வாங்க என்று கூறி 10 நாட்கள் சூட்டிங்கில் தனம் கலந்து கொண்டிருக்கிறார். கேமராவை பார்த்து சிரிக்க சொல்லி இருக்கிறார்கள், ஆனால் படத்தில் தனம் நாட்டாமையை பார்த்து சிரிப்பதுபோல் மாற்றி வைத்துவிட்டார்களாம். அதேபோல் தோட்டம் கொண்ட ராசாவே, சூடிக்கொண்ட ராசாத்தி என்ற பாடல் பின்னனி காட்சி படமாக்கப்பட்ட விதத்தை பற்றியும் தனம் கூறியுள்ளார்.

முதலிரவு காட்சி
ஆரம்பத்தில் நன் எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த ஒருசிலர் என்னை ராசாத்தி ராசாத்தி என்று கூப்பிடுவாங்க, அப்போது எதற்கு அப்படி கூப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், ஆனால் பிறகுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. எனக்கு ஊர் தலைவருயுடன் முதலிரவு காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு இந்த நடிப்பு போதும், இப்படி எல்லாம் என்னால் முடியவே முடியாது என்று சொன்னேன். அங்கு என்னோட சொந்தக்காரங்க எல்லோரும் வெளியில் இருந்தாங்க, எல்லோரும் நான் நடிக்க போறதை பார்க்கிறதுக்கு வந்துருக்காங்க, ஆனால் நான் நடிக்க போறது இப்படிப்பட்ட காட்சி என்று தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, நாம போய் இப்படி நடிக்கணுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கஞ்சா கருப்பு வந்து என்னை திட்டுனாரு. இது எப்படிப்பட்ட படம் தெரியுமா? உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதை நீயே கெடுத்துக்காத என்று சொன்னாரு. அந்நேரத்தில் என் மகனே கோபப்பட்டுட்டான். அம்மா நீ நடிக்கிறதுக்கு வந்துட்டு அந்த காட்சியில் நடிக்க மாட்டேன், இதில் நடிக்க மாடேன்னு சொல்றது நல்லாவா இருக்குன்னு திட்டுனான்.
அதற்குமுன் நான் அக்காட்சியில் நடிக்க முடியாதுன்னு சொன்னதும் சசிகுமார் சார் வந்து என்கிட்ட, சமாதானம் பண்ணுனார். சார் என்னால இதுபோல நெகட்டிவாக நடிக்க முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மகன் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு சரின்னு பட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பின் அக்காட்சியில் நடித்தேன். ஆனால் அப்பட கேரக்டர் எனக்கு பிறகு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று தனம் கூறினார்.