பிரபல நடிகைக்கு விமானநிலையத்தில் ஏற்பட்ட கஷ்டம்! கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ...

Airport Tamilactress Sudhachandran
By Edward Oct 23, 2021 06:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாகவும் தற்போது சீரியல் நடிகையாகவும் இருந்து வருபவர் 

தொழில் சுதா சந்திரன். இவர் நடிகை மட்டுமில்லாமல் மிக சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.

நடிகை சுதா சந்திரன் அவர்கள் விபத்து ஒன்றில் தன்னுடைய காலை இழந்து பின் செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்தி உள்ளார். இருந்தாலும் இவர் பல நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு முறை நான் விமான நிலையம் செல்லும் போதும் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படும் போது என்னுடைய செயற்கை மூட்டையை சேர்த்து ஈடிடி டிடக்டர் சோதனை (வெடிகுண்டு சோதனை) செய்ய சொல்வேன்.

ஆனால், அங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை நம்பாமல் எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டடு இருப்பதை எடுத்து வெளியே காட்ட சொல்வார்கள்.

எப்படி என்னுடைய செயற்கை மூட்டை நான் எடுத்து வெளியே காட்ட முடியும்? இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்படும் போதெல்லாம் இந்த பிரச்சனையை நான் எதிர்கொள்கிறேன். இது குறித்து நல்ல ஒரு நடவடிக்கை மாற்றுதிறனாளிகலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரின் கூறியுள்ளார்.