திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகையை பிளான் போட்டு தூக்கிய இயக்குனர்!! சூர்யாவின் அடுத்த பிளான்.. இதோ..
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து அவரது 43வது படத்தினை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் சூரரை போற்று படத்தினை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் பெயர் புறநானூறு என்று கூறியபடி ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சூர்யா மனைவி ஜோதிகாவின் 2டி தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
மேலும், திருமணமாகி குழந்தை பெற்றப்பின் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை நஸ்ரியா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் தமன்னாவின் ஆசை காதலர் விஜய் வர்மாவும் நடிக்கவுள்ளார்களாம். விஜய் வர்மாவை நடிகை தமன்னா தான் சிபாரிசு கொடுத்திருக்கிறாராம்.
