வாய்ப்பு கிடைத்தும் சூப்பர் ஸ்டாரை 30 ஆண்டுகளாக ஒதுக்கிய 53 வயது நடிகை!! தட்டித்தூக்கிய மீனா..
சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அவருடன் எப்படியாவது நடித்திடவேண்டும் என்ற ஆசை வரும். அப்படி ஸ்ரீதேவி முதல் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை பலர் ரஜினிகாந்துடன் நடித்துள்ளனர். ஒருசில முன்னணி நடிகைகளால் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போயுள்ளது.
சுகன்யா
அதில் ஒருவராக இருப்பவர் நடிகை சுகன்யா. கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்த சுகன்யா 30 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது முடியாமல் போனதாம்.
அந்தவகையில் முத்து படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சுகன்யாவை நடிக்க வைக்க கேட்டு ஆள் அனுப்பியும் அந்த தகவல் அவரை சென்று சேரவில்லையாம். அப்படத்தில் மீனாவின் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவரால் நடிக்க முடியாமல் போனதாக சுகன்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா
மேலும் நடிகை சுகன்யாவை போல் வாய்ப்பு கிடைத்து நடிக்க முடியாமல் போனவர்களில் சிலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமாக நடிகை ஜெயலலிதா பில்லா படத்தில் ஸ்ரீபிரியா ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சில காரணங்களாக அவரால் அப்படத்தில் நடிக்காமல் போயுள்ளது.
மேலும் ரங்கா படத்தில் கே ஆர் விஜயா ரோலில் நடிக்க ஜெயலலிதாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அரசியல் பயிற்சியில் அப்போது இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாக அவரே பேட்டியொன்றில் கூறிருக்கிறாராம்.