ரூ.1 கோடி சம்பளத்தை உதறி 4 ஆயிரம் கோடி சம்பாதித்த சாதனைப் பெண்!! அதுவும் 23 வயதுதான்..
வினீதா சிங்
ரூ.1 கோடி சம்பளத்தில் தனக்கு கிடைத்த வேலையை உதறித்தள்ளி தற்போது ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஒரு பெண். அவர் வேறும் யாரும் இல்லை 23 வயதான வினீதா சிங் என்பவர் தான். ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீதாவிற்கு ரூ. 1 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அதை விட்டுவிட்டு தன் கனவை நோக்கிய பயணத்தில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
10 வயதில் சிறு பத்திரிக்கையை தொடங்கிய, விற்பனை மற்றும் விலை நிர்ணயம் போன்ற பாடங்களை வினீதாவுக்கு கற்றுக்கொடுக்க, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் அகமதாபாத் போன்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றப்பின் நல்ல நிறுவனங்களில் பணிபுரிந்தார். 23 வயதில் ஒரு பெரு நிறுவனத்தின் 1 கோடி சம்பள வேலையை உதறி சுகர் காஸ்மெட்டிஸ் என்ற நிறுவனத்தை 2015ல் நிறுவினார்.
சுகர் காஸ்மெட்டிஸ்
இந்திய பெண்களுக்கு ஏற்றவாறு உயர்தர மலிவு விலையிலான தயாரிப்புகளுக்கு இந்திய சந்தியில் ஒரு சிக்கல் இருப்பதை கண்டறிந்து, இந்தியாவின் மாறுபட்ட தோல் நிறம், இங்குள்ள மக்களின் விருப்பங்களுக்கேற்ப சில பொருட்களை தயார் செய்ய முடிவெடுத்தார்.
சுகர் பிராண்டின் லிப்ஸ்டிக்குகள், ஐ லைனரள் மற்றும் பல அழகு சாதன பொருட்கள் இந்தியா உள்ளீட்ட பல புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சுகர் விரைவில் பிரபலமானது. வினீதா சிங்கின் சுகர் பிராண்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் டிஜிட்டல் வணிகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தானாம்.
பிப்ரவரி 2025 நிலவரப்படி சுக காஸ்மெடிக்ஸின் மதிப்பு ரூ. 30 பில்லியன். வினீதா சிங்கில் நிகர சொத்து மதிப்பாக 300 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.