அப்பாவுக்கு 7000 ஆயிரம் கோடி சொத்து!! 53 லட்ச காரில் பிரபல நடிகரின் மகள்..
சுஹானா கான் ஹூண்டாய்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் படங்கள் மற்றும் விளம்பர வீடியோக்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சுஹானா கான் பயன்படுத்திய கார் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் பயன்படுத்திய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரககாரில், 72.6 kWh பேட்டரி ஆப்ஷன் கொண்டது. ஒருமுறை பேட்டரி நிரப்பினால் 631 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியுமாம். காரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் நிரப்ப சுமார் 7 மணிநேரமாகுமாம்.
150 kw DC சார்ஜர் பயன்படுத்தினால் காரின் பேட்டரியை வெறும் 21 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பிவிடுமாம். அப்படிப்பட்ட காரில் சுஹானா வந்திருக்கிறார்.
தன்னுடைய தந்தை ஷாருக்கான் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புக்கு அதிபதியாக இருந்தும் சுஹானா கான் 24 வயதில் சுமார் 15 கோடி ரூபாய் சொத்து மதிப்பை வைத்துள்ளாராம். அப்படி தன்னுடைய சொந்த காலில் நின்று தான் 50 லட்சம் மதிப்பிலான அந்த ஹூண்டாய் காரினை வாங்கியிருக்கிறார்.