வாய்ப்பில்லாமல் கடைசியில் சீரியல் பக்கம்! பிக்பாஸ் சுஜா வருணி

serial televison sujavarunee
By Edward Dec 02, 2021 02:00 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பின் கொடிக்கட்டி பறந்தவர்கள் ஒருசிலர் தான் இருக்க முடியும். அப்படி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மட்டும் தான் சினிமாவிலும் மற்ற த்துறையிலும் பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தவர் சுஜா வருணி. பல படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களிலும் குத்தாட்டம் ஆடியும் வந்தவர் சுஜா. பின் 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து பின் வெளியேறினார்.

நிகழ்ச்சிக்கு பின் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து பின் அத்வைத் என்ற மகனை பெற்றெடுத்தனர். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து படவாய்ப்பிற்காக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வந்தார். தற்போது வாய்ப்புகள் சரிப்பட்டு வராமல் சீரியல் பக்கம் சென்றுள்ளார்.

அன்பே வா சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜா. இதன்பின் திரிஷ்யம் 2வில் நடிக்க கமிட்டாகியும் உள்ளாராம்.