கமல் உச்சத்தை தொட இதுவும் ஒரு காரணமா? புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை..

kamalhaasan sujathasivakumar
By Edward Apr 01, 2022 05:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் முக்கிய இடத்தினை பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பால் உலக நாயகன் என்ற பேரோடு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார்கள்.

இவரது முதல் படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம். பேச்சு எனும் கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டிய சுஜாதா சிவகுமார் கமலைப் பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். கமலஹாசன் யாரையும் தாழ்த்திப் பேசமாட்டார்.

தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சக நடிகர்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கமல்ஹாசன் கவனமாக இருப்பார் என்றும் தன்னை பார்த்து நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி ஊக்கம் அளிப்பார் என்று கூறியுள்ளார்.

தன் சினிமா வாழ்க்கையில் புரட்டிப்போட்ட திரைப்படமான இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப் படத்தில் பிரியாமணியின் தாயாராக சுஜாதா நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு சுஜாதா சிவகுமார் என்ற தன் பெயரை பருத்திவீரன் சுஜாதா என்று சொல்லுமளவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல், மேலும் பல விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து தமிழ் படங்களில் அம்மா மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.