கவுண்டமணி பார்க்கத்தான் அப்படி!! அந்த விசயத்தில் முரட்டு ஆள்.. உண்மையை கூறிய பிரபலம்
தமிழ் சினிமாவின் இன்றுவரை வரை தமிழ் ரசிகர்களால் புகழப்பட்டு வரும் காமெடி நடிகர் கவுண்டமணி. தனக்கென தனி வசனம் மற்றும் உடல்மொழியால் காமெடி செய்வதில் கைவந்த கலையாக வைத்திருக்கும் கவுண்டமணி சமீபகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வரும் கவுண்டமணி பற்றி பல நட்சத்திரங்கள் புகழ்ந்து பேசுவதுண்டு. பெரும்பாலான சமயங்களில் கவுண்டமணி, காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்த்து பேசுவதுண்டு.
ஆனால் அவர் பேசுவது உருவகேலியாகவும் மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து பேசுவார். அப்படியிருந்தும் அவரது காமெடியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது. திரைப்படத்தில் தான் அப்படி என்றால் ரியல் வாழ்க்கையில் கவுண்டமணி ஹூமர் சென்ஸ் அதிகமாகவே வைத்திருப்பார்.
அவருடன் எப்போதும், நடிகர் சத்யராஜ் மற்றும் மணிவண்ணனுடன் தான் நேரத்தை அதிகமாக செலவிடுவார். அவர் செய்யும் காமெடிகள்ளால் தன்னை அறியாமல் பலர் சிரித்துவிடுவார்கள். அந்தவகையில் நடிகை சுகன்யா கவுண்டமணியுடன் பணியாற்றி பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நீங்கள் திரையில் பார்க்கும் கவுண்டமணி வேறு என்றும் நிஜ வாழ்க்கையில் பல விசயங்களை அவர் தெரிந்து வைத்திருப்பவர். சினிமாவை பற்றி அதிலும் ஹாலிவுட் சினிமாவை பற்றிய தகவல்களை வியந்து பேசக்கூடியவர் கவுண்டமணி.
சில படங்களின் பெயர்களை கூறி அப்படத்தை பாருங்கள், அந்த ஹீரோ சூப்பராக நடித்திருப்பார் என்று என்னிடம் கூறியதாக சுகன்யா தெரிவித்துள்ளார். மேலும், தமிழில் நடிப்பதோடு நிறுத்தி ஹாலிவுட் படங்களை விரும்பி பார்ப்பார். அந்த விசயத்தில் கவுண்டமணி ஒரு முரட்டு ஆள் தான் என்று நடிகர் சத்யராஜ் கூட பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.