13 வயதில் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு தான் வெறுப்பில் நடித்தேன்!! நடிகை சுகன்யா..
பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார். 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு அரசியல்வாதியின் கட்டுபாட்டில் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அவரால் தான் பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
சமீபத்திய பேட்டியொன்றில் 1992ல் வெளியான் சின்ன கவுண்டர் படத்தில் விஜய்காந்துக்கு ஜோடியாக நடித்த காட்சி குறித்து பகிந்துள்ளார். அப்படத்தில் என்னிடம் நடிக்க கேட்ட போது ஓகே சொன்னேன்.
13 வயதில் பாதி படத்தினை நடித்து முடித்தப்பின் தான் எனக்கு தெரியும் நான் தான் கதாநாயகின்னு என்று. அதுவும் விஜய்காந்த் என் தொப்புளில் பம்பரம் விடும் காட்சியில் நடிக்க, ரிகர்சல் நடந்தது. எனக்கு மூன்று அசிஸ்டண்ட் பம்பரம் ரிகர்சலுக்காக இருந்தார்கள்.
எனக்கு ரொமப பயமாக இருந்தது. பண்ணவே மாட்டேன்னு சொல்லியும் அதில் நடித்தேன். ஒருசில விசயத்திற்கு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று அவரை எடுத்த நடிகை அனு ஹாசன் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த காட்சியில் நடித்த போது கூச்சமாக ஒருமாதிரி இருந்த தாகவும் ஆனால் அந்த காட்சி ஆபாசமாக இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியக அருமையாக இயக்கினார் ஆர் பி உதயகுமார் என தெரிவித்துள்ளார் சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சுகன்யா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
You May Like This Video