கமல் இருந்தால் அந்த இடத்தை பினாயில் போட்டு கழுவணும்!! நடிகை சுமித்ரா ஓப்பன் டாக்..
நடிகை சுமித்ரா
பல நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பின் அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்திருப்பார்கள். அப்படி ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சில ஆண்டுகளில் அம்மாவாக நடித்தவர் தான் நடிகை சுமித்ரா.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிங்காரவேலன் படத்தில் நடந்த ஒரு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் அம்மா அம்மா என்று ஓடி வரவேண்டும். ஆனால் கமல் சுமிசுமி என்று ஓடிவருவார்.
அதற்கு நான் அடிவாங்குவ இப்ப நான் உனக்கு அம்மா.. அம்மான்னு கூப்பிடு என்று சொல்லுவேன். கமல் அதற்கு கோபப்பட்டு எனக்கு காதலியா நடிச்ச பொண்ணை இப்போ அம்மாவா எப்படி கூப்பிடுவது? ஏன் இப்படி பண்ணுறீங்கன்னு இயக்குநரிடம் கோபப்படுவார்.
கமல் இரட்டை அர்த்த வார்த்தைகள்
ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக பேசும் கமல், இரட்டை அர்த்த வார்த்தைகள் தான் அதிகம் பயன்படுத்துவார். அவர் இருக்கிற இடத்தை கண்டிப்பா பினாயில் ஊத்தி கழுவி விடணும் அப்பளவு பேசுவார்.
ஆனால் அது ஜாலியாகத்தான் இருக்கும் எங்களுக்கு ஜோடியாக நடிச்சுட்டி இப்போது 16 வயசு ஹீரோயின்களோடு ரஜினி, கமல் நடிக்கும் போது பார்த்தீங்கள நம்மகூட நடிச்சிட்டு 16 வயசு பொண்ணோட டான்ஸ் ஆடிட்டு இருக்காங்கன்னு கிண்டல் பண்ணுவோம் என்று நடிகை சுமித்ரா பகிர்ந்துள்ளார்.