கதறும் விஜய் ரசிகர்கள்.. தலையில் துண்டைப்போடபோகும் கலாநிதி மாறன்
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பீஸ்ட். அதிகாலை 4 மணிக்கு திரைக்கு வந்த இப்ப்படத்தை பார்த்துவிட்டு, விஜய்யின் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை.
குறிப்பாக பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும், திரையரங்கிற்கு வெளியே விஜய் ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் பெரிதளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றத்தை தந்துள்ளதால் இனி வரும் நாட்களில் படம் எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெரும் என்று தெரியவில்லை.
ஏனென்றால், நாளை கே.ஜி.எப் 2 திரைக்கு வரவிருப்பதால், கண்டிப்பாக பீஸ்ட் படத்தின் வசூல் அடிவாங்கும் என்று தெரிந்த விஷயம் தான். தற்போது பீஸ்ட் படம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வரும் நிலையில் கண்டிப்பாக பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்புண்டு.