வெறும் டவலோடு வந்த வடிவேலு.. இயக்குனர் கொடுத்த ரியாக்ஷன்!! ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, சமீபத்தில் அரண்மனை 4 படத்தினை இயக்கி வெளியிட்டிருந்தார். படம் வெளியாகி 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அரண்மனை 4 படத்திற்கு அடுத்த படத்தினை இயக்க தயாராக இருக்கிறார். இடையில் கலகலப்பு 3 படத்தினை இயக்கவிருந்த நிலையில் அரண்மனை 4 படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அரண்மனை 5 படத்தை இயக்க முடிவில் இருக்கிறாராம்.
மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இயக்குனர் சுந்தர் சி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வடிவேலு பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். நகரம் படத்தின் வடிவேலு வெறும் டவலுடன் ஒரு பாட்டு பாடிக்கொண்டே டான்ஸ் ஆடிக்கொண்டு வரும் போது நான் படுத்துக்கொண்டு இருக்கும் காட்சி இருக்கும்.
நான் இயக்குனர் என்பதால் ஷாட் ஓகே என்று கூறிவிட்டு நான் படுத்துவிட்டேன். இதற்கு முன் ரிகர்சல் எல்லாம் பண்ணிவிட்டேன். ரிகர்சல் சமயத்தில் வடிவேலு டவல் கட்டவில்லை, நார்மல் ஆடையில் இருந்தார். அதன்பின் என் பொசிஷனில் படுத்துக்கொண்டே. ஆக்ஷன் கேமரா சொல்லியதும் நான் திரும்பினேன்.
வடிவேலு டவல் போட்டிருந்தார். இப்படி இருக்கும் போதே காமெடியா இருக்கே, என்னோட லோ ஆங்கிளில் பார்த்தால் எப்படிஇருக்கும். நான் திரும்பியது அவரை பார்த்து சிரித்துவிட்டேன். பின் ஒன்மோர் எடுத்து முடித்தேன். நம்மை மீறி சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் தான் வடிவேலு என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி.