ஆர்யாவின் தங்கை நயன்தாராவா? ஆண்ட்ரியா மட்டும் இல்லன்னா மொக்கை வாங்கிருப்பார்!!

Arya Sundar C Andrea Jeremiah Nayanthara
By Edward 10 மாதங்கள் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி சமீபகாலமாக பேய் கதைகளை அரண்மனையில் வைத்து இயக்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அப்படி சமீபத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா போன்றவர்கள் நடிப்பில் அரண்மனை 3 படத்தினை வெளியிட்டார். படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அரண்மனை முதல் பாகத்தில் நானும் ஆண்ட்ரியா, வினய், ஹன்சிகா போன்றவர்கள் நடித்திருந்தோம். ஆனால் என்னுடைய கதாபாத்திரத்தில் முதல் ஆர்யாவை தான் தேர்வு செய்து வைத்திருந்தேன்.

மேலும் ஆண்ட்ரியாவிற்கு பதில் நயன் தாராவையும் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். கதையில் ஆர்யாவின் தங்கையாக நயன் தாரா தான் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் ஆர்யா நயன் தாரா நடிக்க முடியாத சூழல் உருவானது.

அதனால் தான் நானும் ஆண்ட்ரியாவும் நடித்தோம் என்று கூறியிருந்தார். அப்படி ஆர்யாவிற்கு நயன் தாரா தங்கையாக நடித்திருந்தால் படம் சொதப்பி இருக்கும்.

இருவரின் ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அப்படியிருக்கையில் அவர்கள் இந்த ரோலில் நடித்திருந்தால் ரசிகர்கள் ஏற்றிருக்கவே மாட்டார்கள்.