மாடர்ன் லுக்கில் மிரட்டும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்..
கேப்ரியல்லா செல்லஸ்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். சுந்தரி சீரியல் முடிந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அனைவருக்கும் அந்த செய்தியை அறிவித்து சொந்த ஊருக்கே சென்றார்.
இடையில் தன் கணவருடன் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் கேப்ரியல்லா. கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்றப்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்தும் பேட்டிகள் கொடுத்தும் வருகிறார். தற்போது, குழந்தை பெற்றப்பின் மாடர்ன் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். சுந்தரி சீரியலுக்கான தமிழக விருதினை வாங்கியிருக்கிறார் கேப்ரியல்லா.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.