பிரபல நடிகையின் மறைந்த கணவரின் ரூ. 30 ஆயிரம் கோடி சொத்து!! போட்டிபோடும் 2 மனைவிகள்...
கரிஷ்மா கபூர் சஞ்சய் கபூர்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கரிஷ்மா கபூர் கடந்த 2003ல் தொழிலதிபர் சஞ்சய் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்த தம்பதி கடந்த 2016ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்து செய்யும்போது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து 14 கோடி ரூபாய்-கு கடன் பத்திரங்களை எழுதிக்கொடுத்திருக்கிறார் சஞ்சய் கபூர். இதன்மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைக்க சஞ்சய் கபூர் வழிவகை செய்திருக்கிறார். அதோடு மும்பையில் இருக்கும் ஒரு வீட்டையும் அவர்களுக்கு எழுதி கொடுத்துள்ளார்.
பிரியா சச்தேவ்
பின் தொழிலதிபர் சஞ்சய் கபூர், பிரியா சச்தேவ் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். பிரியாவிற்கு இத்திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 30 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூருக்கு இரு மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அவர் மரணத்தால் விட்டுச்சென்ற சொத்திற்கு மனைவிகளிடையே போட்டி ஏற்பட சஞ்சய் கபூர் உயில் எழுதி வைத்திருப்பதாக கூறி, தனக்கே சொத்து சொந்தம் என்று அவரின் 3வது மனைவி பிரியா கூறுகிறார். சஞ்சய் கபூரின் கம்பெனியில், தன்னை ஒரு இயக்குநராக பிரியா சச்தேவ் நுழைத்துக்கொண்டார்.
ரூ. 30 ஆயிரம் கோடி சொத்து
இந்த சொத்துக்களை ஒட்டுமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக பிரியா சச்தேவ் காய்களை நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. கரிஷ்மாவின் மகளும், மகனும் சஞ்சய் கபூரின் வாரிசுகளான தங்களுக்கும் சொத்தில் உரிமையுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே சொத்துப்பிரச்சனை, டெல்லி உயர்நீதிமன்றம் வரை செல்ல, சஞ்சய் கபூர் எழுதியுள்ள உயிலை பிரியா சச்தேவ் மாற்றிமைத்ததாக அவர் மீது கரிஷ்மா குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கள் தந்தையால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் உயில் சட்டப்பூர்மான ஆவணமில்லை என்றும் போலியாக ஜோடிக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சஞ்சய் கபூர் இறந்த சில நாட்களில் அவரது தாயாரை கட்டாயப்படுத்தி 2 ஆவணங்களில் பிரியா கையெழுத்து பெற்றதாக சஞ்சய் கபூரின் சகோதரி மந்திரா கபூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.