இது நம்ம லிஸ்ட்ல இல்லையே! இந்த காமெடி நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை சன்னி லியோன்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் காமெடி நடிகர் சதீஷ். சமீபத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜையை ஆரம்பித்தார்.

யுவன் இயக்கும் வரலாற்று படமாக உருவாக ஹாரர் காமெடி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சதீஷ். யாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் க்ளாமர் நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதை அடுத்து வீரமாதேவி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது காமெடி நடிகர் சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை சன்னி லியோன்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்