சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நஸ்ரின் அம்மா கனவை நிஜமாக்கிய லாரன்ஸ் மாஸ்டர்..
சூப்பர் சிங்கர் நஸ்ரின்
விஜய் டிவியில் பல ஆண்டுகளகா ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் ஜூனியர் சீசன் 10 கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது.
தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட்டில் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர்களின் கனவை கேட்டு உதவியிருக்கிறார் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்.
ராகவா லாரன்ஸ்
போட்டியாளர் நஸ்ரின் அம்மாவிடம் உங்கள் கனவு என்ன என்று லாரன்ஸ் மாஸ்டர் கேட்க, டைலரிங் கடை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதை இந்த வாரம் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நிறைவேற்றி வைத்து நஸ்ரின் தையல் கடையை ஆரம்பித்து வைத்து உதவியிருக்கிறார்.
இந்த வார எபிசோட்டில் நடந்த பிரமோ வீடியோவை விஜய் டிவி இணையத்தில் பகிர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை புகழ்ந்து வருகிறார்கள்.