சூப்பர் சிங்கர் 2 டைட்டில் வின்னர் அல்கா அஜித்தா இது? வாய்ப்பில்லாமல் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா!!

Super Singer Star Vijay
By Edward Jun 30, 2022 06:38 AM GMT
Report

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் சீசன் 2009ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றியவர் அல்கா அஜித். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த அல்கா 25 மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்று  தமிழ் பாடகியாக களம் கண்டு வருகிறார்.

சுப்பர் சிங்கருக்கு பின்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பே 500 மேடைகளில் 5000 பாடல்களுக்கும் மேல் பாடி அசத்தியவர். சமீபத்தில் என்னோட சென்னை என்ற ஆல்பம் பாடலுக்கு பாடகர் அந்தோனிதாசனுடன் இணைந்து பாடியுள்ளார்.ராஜா ராணி படத்தில் கூட சில்லென ஒரு சிரிப்பிலே என்ற பாடலையும் பாடியிருக்கிறார். தற்போது 26 வயதாகும் அல்கா அஜித் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கச்சேரிகள்

இதை பார்த்த ரசிகர்கள் அல்கா அஜித்தா இது என்று ஷாக்காகி வருகிறார்கள். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட கச்சேரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இணையத்தில் அதன் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சூப்பர் சிங்கர் டைட்டிலை கைப்பற்றினாலும் படங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அடையாளமே தெரியாமல் போயுள்ளார்.

GalleryGallery