சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 டைட்டில் வின்னர் ஸ்பூர்த்தியா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
சூப்பர் சிங்கர்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு பரிமானங்களில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.
ஸ்பூர்த்தி ராவ்
அப்படி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 4வது ஜூனியர் நிகழ்ச்சியில் 9 வயதான ஸ்பூர்த்தி ராவ் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றினார். பெங்களூரை பூர்வீகமாக கொண்டு சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு எஸ் பி பி முதல் ஏ ஆர் ரகுமான் வரை அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
தற்போது ஸ்பூர்த்தி கர்நாடக் சங்கீதத்தை முழுமையாக பயிற்று வந்துள்ளாது. தற்போது 18 வயதாகும் ஸ்பூர்த்தி இணையத்தில் ஆக்டிவாக இருந்து பாடல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு கச்சேரியில் கலந்து கொண்டு பாடிய போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். டைட்டிலை கைப்பற்றி இந்த ஆண்டோடு 10 ஆண்டுகளான நிலையில் அதுகுறித்து ஒரு பதிவினையும் ஸ்பூர்த்தி பகிர்ந்திருந்தார். தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


