பாடகியாவதை விட்டுவிட்டு போட்டோஷூட்டில் இறங்கிய சூப்பர் சிங்கர் மானசி.. ஷாக்காகும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என்று பல பரிமானங்களில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கூடிய சீக்கிரம் துவங்கவுள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசனில் அதிக ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக திகழ்ந்தவர் மானசி.
இறுதி சுற்று வரை சென்று டாப் 5 இடத்தினை பெற்ற மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார்.
தன் திறமையை நிரூப்பிக்க இணையத்தில் ஆக்டிவாக இருந்து பாடல் ரீல்ஸ்களை வெளியிட்டு வரும் மானசி போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பாடலான ராட்சச மாமனே என்ற பாடலை க்யூட்டாக பாடி ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். இதற்கிடையில் போட்டோஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார்.