எல்லைமீறிய விஜய் டிவி!! பெற்றோர்களால் மன்னிப்பு கேட்ட சூப்பர் சிங்கர் பூஜா.. ஒருவேலை அப்படி இருக்குமோ
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி வருகிறார் பூஜா. நிகழ்ச்சியில் அவர் பாட வந்தாலே பொதும் டிஜே பிளாக் வித்தியாசமான சிறப்பு பாடல்களை போட்டு பூஜாவை மயக்கி வந்தார்.

இந்த செக்மெண்ட்டிற்கு மட்டுமே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அப்படி பூஜாவின் பெற்றோர்கள் சமீபத்திய எபிசோட்டில் கலந்து கொண்டனர். அப்போது அவரது பெரியம்மா டிஜே பிளாக் செய்வது எனக்கு பிடிக்கவில்லை, ஒரு பெண் இல்லையே ரொம்ப ஓவராக போகிறீர்கள் என்று கூறினார்.
இதனால் மனமுடைந்த டிஜே பிளாக்கின் அந்த பிரமோ வீடியோ வைரலாகியது. இந்நிலையில் அதெல்லாம் பிராங்க் தான் என்று பூஜாவின் பெரியம்மா கூறிவிட்டார்.

வருத்தப்பட்ட டிஜே பிளாக்கிற்கு பல ஆதரவு கொடுத்த நிலையில், பூஜா டிஜே பிளாக்குடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் அனைவரும் சேட்டையை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன் அப்படி இல்லாதவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேலை அப்படி இருக்குமோ என்று இருவரை வைத்து கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.