நான் சுமாரான பாடகரா! சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய ஆதித்யா போட்ட பதிவு!

supersinger television adhithya
By Edward Sep 06, 2021 11:40 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான ஷோ என்றால் சூப்பர் சிங்கர் தான். பல ஆண்டுகளாக சீனியர் ஜூனியர், சாம்பியன்ஸ் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது சூப்பர் சிங்கர் 8 சிசன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் சேனா, ஐய்யனார், மானசி போன்றவர்கள் கடந்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினர். முத்துச்சிற்பு ஏற்கனவே இறுதி சுற்றுக்கு நுழைந்த நிலையில், மானசி வெளியேறினார். இந்த வாரத்தில் இசையமைப்பாளர் அனிரூத் சிறப்பு விருந்தினராக வழவழைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடும் போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடைபெற்றதில், அனு, பரத், அபிலாஷ் இறுதி சுற்றுக்கு நுழைந்தனர். ஆதித்யா நன்றாக பாடினாலும் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் அனிரூத் நாம் இருவரும் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில், ஆதித்யா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது இன்ஸ்டாகிராமில் ஹேட்டர்ஸ்கள் படுமோசமாக மெசேஜ் செய்து வருவதாகவும் அது குறித்து பதிவினை போட்டு வந்துள்ளார்.

அதில் ஒருவர் மோசமாக திட்டியதற்கு ஆதித்யாவின் ரசிகர் ஒருவர் கண்டபடி திட்டி பிச்சை எடுக்க போ என்றும் திட்டித்தீர்த்துள்ளார். இதற்கு ஆதரவாக ஆதித்யாவும் அவரது கருத்தினை கூறியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது கவர் சாங்கினை பாடி விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் கூறி பதிவிட்டுள்ளார்.

நான் சுமாரான பாடகரா! சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய ஆதித்யா போட்ட பதிவு! | Super Singer Adhithya Post Ofter Eliminated