நிச்சயம் வரை சென்ற காதலி? சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்கு விரைவில் திருமணம்! எப்போ தெரியுமா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களில் பாடி பிரபலமாகுவார்கள். அப்படியொரு பெரிய பங்கினை வகித்து வருகிறது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
அந்தவரிசையில் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடன் நல்ல பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. உதித் நாராயணன் குரலின் மறு உருவம் என்ற பெயரை எடுத்த அஜய் கிருஷ்ணா பல மேடைகளில் பாடியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகிறார்.
விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலும், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் காதலித்து வந்த ஜெஸ்ஸியுடன் நிச்சயதார்த்தம் செய்தார்.
பல ஆண்டுகளாக அஜய் கிருஷ்ணா ஜெஸ்ஸுயுடன் காதலில் இருந்ததாகவும், பெண் வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ஜெஸ்ஸி என் வீட்டிடம் வந்து பேசு என்று கூறியதால் அஜய் கிருஷ்ணா தன் காதலை ஜெஸ்ஸின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, இருவருக்கும் இரு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் ஜோடியாக வெளியில் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் அவருக்கும் அவர் காதலித்து வந்த ஜெஸ்ஸிக்கும் வரும் மே மாதம் 13 ஆம் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளது.