வின்னர் யார்ணு தேர்ந்தெடுத்தார்களா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி கடும்கோபத்தில் பாடகர் பென்னி தயால்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி சிறந்த கலைஞர்கள் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்து வருகிறது. அந்தவகையில், சூப்பர் சிங்கர் 8 சீசன் பல வாரங்கள் கொரோனாவால் தள்ளிவைத்து தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நன்றாக பாடி வந்த போட்டியாளர் ஸ்ரீதர் சேனா எலிமினேட்டாகி வெளியேறினார். இதற்கு பலர் அதிர்ச்சியாகி விமர்சித்து வந்தனர். அதில் பென்னி தயாலின் தவறான நிலைப்பாட்டால் ஸ்ரீதர் சேனா வெளியேறியதற்கு காரணம் என்று இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வாதம் செய்து வந்தனர்.
இதனால் தான் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி பற்றிய கருத்தினை கூறப்போவதில்லை என்றும் அடுத்த சீசனில் என்னை பார்க்க முடியாது அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார். இதற்கு சிலர் ஆதரவாக ஏன் இப்படி என்று கேட்டு வந்தனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையை குறித்து ஒரு போஸ்ட் ஒன்றில் அவரை கடுமையாக ஒரு ரசிகர் பேசி மெசேஜ் செய்துள்ளார்.
அதில், உங்கள் வாயிலிருந்து ஏன் பொய் கூறுகிறீர்கள், ஏற்கனவே எலிமினேஷன் யார் என்று தேர்வு செய்துவிட்டீர்கள். வின்னர் யார் என்பதையும் செலக் செய்து விட்டீர்களே என்று பதிவிட்டு நடுவர்களின் இன்ஸ்டா அக்கவுட்க்களை டேக் செய்து பேசியுள்ளார். இதற்கு பென்னி தயால் கோபத்தினை கட்டுப்படுத்தி ஹாப்பி ஓணம் என்று பதிவிட்டு மெசேஜ் செய்துள்ளார்.
