சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது? மேக்கப்பில் எப்படி இருக்காங்க தெரியுமா...
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.
சூப்பர் சிங்கர் பிரியங்கா
அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையான பிரியங்கா, கண்டாங்கி சேலை என்ற பாடலை சமீபத்தில் பாடியிருக்கிறார். சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடத்திய லைவ் கான்செட்டில் அவருடன் இணைந்து பாடியிருக்கிறார் பிரியங்கா.
அங்கு பாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



