சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பாடகி சித்ரா, தமன்.. நெகிழவைத்த குட்டி சிறுமி..

Chitra Thaman Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward Jul 07, 2023 09:15 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என இரு பரிமானங்களில் ஒளிப்பரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் சீனியர் 9 சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.

அதனை தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசனும் வருகிற 8 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. முதல் எபிசோட்டிற்காக பிரபல இசையமைப்பாளர் தமன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். நிகழ்ச்சியில் பிரவியிலேயே பார்வையை இழந்த குட்டி சிறுமி பாடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பாடகி சித்ரா, தமன்.. நெகிழவைத்த குட்டி சிறுமி.. | Super Singer Junior9 Emotional Video Chitra Thaman

விஜே பிரியங்கா உனக்கு என்னெல்லாம் ஆசையிருக்கு என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி, சித்ரா அம்மாவை தொட்டு ஃபீல் பண்ணனும் என்று கூறியதும் பாடகி சித்ரா கீழே இறங்கி வந்து சிறுமியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து கண்ணீர் விட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தமன், என்ன சொல்றாங்க டாக்டர் என்று சிறுமி பெற்றோரிடம் கேட்டுள்ளார். பிரவியில் இருப்பதால் ஒன்னும் பண்ணமுடியாது என்று கூறியது, நான் டாக்டரிடம் பேசிப்பார்க்கிறேன், எதாவது பண்ணமுடியுமான்னு என்று உருக்கத்துடன் உதவி செய்ய முன்வந்துள்ளார்.