சூப்பர் சிங்கர் 9ல் இருந்து விலகினாரா மாகாபா ஆனந்த்!! அவருக்கு பதில் பிரியங்காவுடன் இவரா!!

Ma Ka Pa Anand Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward May 27, 2023 12:30 PM GMT
Report

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக விஜே மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருவதற்கு மாகாபாவும் பிரியங்காவும் மிகவும் முக்கிய காரணமாக அமைந்து வருகிறார்கள்.

தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசன் இறுதி கட்டத்திற்கு சென்று வரும் நிலையில் இந்த வார எபிசோட்டில் இருந்து மாகாபா ஆனந்த் விலகி இருக்கிறார்.

எப்போது இருவரில் ஒருவர் நிகழ்ச்சி வரவில்லை என்றால் அவர்களுக்கு மாற்றாக வேறொரு விஜய் டிவி பிரபலத்தை தொகுத்து வழங்க அனுப்புவார்கள்.

அந்தவகையில் இந்த வாரம் மாகாபா ஆனந்த் விலகியதால் அவருக்கு பதில் கேபிஒய் குரேஷி பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளர்.