சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலை பாக்குறாங்களா!! வெளியான தகவல்...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பலர் பிரபலமாகி வெள்ளித்திரையில் முக்கிய இடத்தினை பிடித்து வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பிரகதி குருபிரசாத்.
வெளிநாட்டு வாழ் தமிழராக அவர் பாடிய பாடல்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரன்னர் அப் இடத்தினை பிடித்தார் பிரகதி. அதன்பின் பல இசையமையாளர்களின் இசையில் பாடி வருகிறார். இடையில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் பிரகதி, கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரகதி குருபிரசாத்தின் அம்மா என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்னையர் தினத்தன்று அவர் தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரகதி.
அதில் அவரது அம்மா அமெரிக்காவின் காவல் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். San Jose POlice, Community Service officer- ஆக அமெரிக்காவில் பணியாற்றி வருவது குறித்து பிரகதியின் அம்மா கனகா குருபிரசாத் சில பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.
