நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! 26 வயதில் முகம் சுருங்கி ஆளே மாறிட்டாங்களே..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது சீனியர் 10 சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி இடத்திற்கு வரும் போட்டியாளர்கள் சிலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அப்படி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் - அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
தற்போது பாடல் பாடுவதையும் தாண்டி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். தற்போது 26 வயதாகும் பிரகதி சமீபத்தில் ஒரு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். முகம் சுருங்கியபடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சிங்கர் பிரகதியா என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.