21 வயதை எட்டிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!! ஸ்டன்னிங் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க..

London Super Singer Priyanka NK Tamil Singers
By Edward Jun 25, 2025 04:40 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரியங்கா NK

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

21 வயதை எட்டிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!! ஸ்டன்னிங் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer Priyanka Nk Recent Photo In London

21வது பிறந்தநாள்

சமீபகாலமாக பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, சந்தோஷ் நாராயணனின் லண்டன் கான்செட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார். சமீபத்தில் ஜூன் 21 ஆம் தேதியோடு தன்னுடைய 21வது பிறந்தநாளை கொண்டாட்டியிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் தன்னுடைய 21வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.