6 வருஷமா ஒதுக்கி வைத்த விஜய் டிவி!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி விஜே பிரியங்காவுக்கு பதில் இவர் தான்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வரும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். சீனியர், ஜூனியர் என்ற முறையில் ஆண்டு தோறும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் தற்போது ஜூனியர் 9 சீசன் வரை தொகுத்து வழங்கி வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா. இருவரின் காம்போவிற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
ஆனால் பிரியங்காவிற்கு முன் மாகாபா ஆன்ந்துடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜே பாவனா. இடையில் ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் கிரிக்கெர் வர்ணனையாளராக இருந்து தற்போது 6 வருடம் கழித்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
ப்ரீ இறுதி சுற்று நடக்கவுள்ள நிலையில் பிரியங்காவிற்கு பதில் இந்த வாரம் விஜே பாவனா தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.