அப்போ தெருக்குரல் அறிவு இப்போ ராஜலட்சுமியா!! வாரிசுகளுக்காக இப்படி துரோகம் செய்யும் யுவன் - சந்தோஷ்..
இணையத்தில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தமிழ் நபர்களில் ஒருவர் அதிதி சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வருகிற 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு சர்ச்சையான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. விருமன் படத்தில் யுவனுடன் சேர்ந்து அதிதி சங்கர் மதுர வீரன் அழகுல என்ற பாடலை பாடியுள்ளார். இதனை மேடைகளில் கூட அதிதி - யுவன் பாடியிருக்கிறார்கள்.
அறிமுகப்படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகி இருப்பதை பலர் பாராட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் இப்பாடலை முதலில் யுவன் சங்கராஜா சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை தான் பாடவைத்திருக்கிறாராம். ஆனால் வேண்டுமென்றே ராஜலட்சுமி பாடியதை ஒதுக்கி விட்டு அதிதி சங்கர் பாடியதை படத்தில் வைத்துள்ளது சர்ச்சையாகி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. வாரிசு நடிகைக்காக இப்படி நடக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதேபோல், என் ஜாயி என் ஜாமி பாடல் கூட சர்ச்சைக்குள்ளாகியது. அந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடிய தெருக்குரல் அறிவு பல மேடைகளில் சந்தோஷ் நாராயணும் அவரது மகள் தீ-யும் ஒதுக்கி வருவதாக கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர் சந்தோஷ் நாராயணன் தரப்பினர்.
இப்படி வாரிசுகளுக்காக தமிழ் சினிமாவில் மற்ற கலைஞர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களோ என்றும் பாலிவுட்டில் தான் இதுபோன்ற செயல் நடக்கும். தற்போது தமிழிலுமா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/c4341ef9-770f-4430-9e37-f62eddfbbb50/22-62f3538ed6776.webp)