அந்த நியூஸால் மன உளைச்சல்!! ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா எடுத்த அதிரடி..
ஐஸ்வர்யா ராய் மகள்
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஆராத்யா என்ற மகளை பெற்று வளர்ந்து வந்தார்.
சினிமாவில் இருந்து விலகி வாழ்க்கையை பார்த்து வந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கணவருடம் கருத்து வேறுபாட்டால் பிரிந்தும் விவாகரத்து பெறவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.
ஆராத்யா மன உளைச்சல்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா சோசியல் மீடியாக்களில் தன்னைப் பற்றியும் தன் உடல்நிலை பற்றியும் தவறான தகவல்களை பரப்பப்பட்டு வருவதாகவும் இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ஒரு பதிவினை பகிர்ந்து அதை நீக்க க்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதி நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யா இப்படியொரு வழக்கை துணிந்து எடுத்திருப்பதை பலரும் பாராட்டி வியந்து பார்த்து வருகிறார்கள்.