பொண்ணா மாறிட்டியா? இதெல்லாம் ஒரு தொழிலான்னு பேசுனாங்க!! சூப்பர் சிங்கர் 11 சரணின் மறுப்பக்கம்...
சூப்பர் சிங்கர் 11
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்தவாரம் போட்டியாளர்களுக்கு செலபிரேஷன் இசை ரவுண்ட் நடந்துள்ளது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, கங்கை அமரன், வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது போட்டியாளர் சரண், தெருக்கூத்து கலையில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சரணின் மறுப்பக்கம்
தெருக்கூத்து கலை செய்யும்போது, பெண் வேஷம் போட்டு நடிக்கிற, பொண்ணா மாறிட்டியா? இதெல்லாம் ஒரு தொழிலான்னு மோசமா பேசுனாங்க, ஒரே அசிங்கமாகிடுச்சி, நான் ஏன் ஒதுக்கப்படுறேன் என்று ஆதங்கமாக சரண் பேசியுள்ளார்.

உடனே வெங்கட் பிரபு, இப்போ சொல்கிறேன், என்னுடைய அடுத்த படத்தில் நீங்க நடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.