சூப்பர் சிங்கர் செந்திலை மாறியாக மாற்றிய ராஜலட்சுமி.. வைரலாகும் வீடியோ..

Viral Video Super Singer
By Edward Aug 18, 2022 05:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் 6 சீசனில் தம்பதிகளான செந்தில் - ராஜலட்சுமி என்ற இருவரும் கலந்து கொண்டிருந்தனர். கிராமத்து பாடலை மையப்படுத்தி பாடிய இருவரும் கிராமத்தில் பல பாடல்களை எழுதி பாடி வந்தனர்.

பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்கள். ஒரே சீசனில் கலந்து கொண்ட இருவரில் செந்தில் டைட்டில் வின்னாராக அறிவிக்கப்பட்டார். ராஜலட்சுமி 6வது எடிஷனில் வெளியேற்றப்பட்டார். இதன்பின் இருவரும் சினிமா வாய்ப்பு பெற்று சில பாடல்களில் பாடியுள்ளனர்.

ராஜலட்சுமி புஷ்பா படத்தில் ஏ சாமி என்ற பாடலை பாடி பட்டையை கிளப்பினார். சமீபத்தில் கூட விருமன் படத்தில் மதுர வீரன் பாடலை பாடிய ராஜலட்சுமியை தூக்கிவிட்டு அதிதி சங்கர் பாடலை தேர்ந்தெடுத்த விவகாரம் சர்ச்சையானது.

இந்நிலையில் இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் தன் கணவருடன் நகைக்கடைக்கு சென்று செயின் வாங்கி கொடுத்துள்ளார். கழுத்தில் தனுஷ் நடித்த மாரி படத்தில் போட்டிருக்கும் பெரிய செயினை மாட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார்.