வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தனுடன் மேடையில் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி!! வீடியோ..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் லைவ் கான்ஸ்செட் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது
அதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பாட்டு பாடியுள்ளனர். சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் லைவ் கான்ஸ்செட் மே 3 ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது சிவாங்கி, வித்யாசாகரின் மகன் ஹர்ஷாவர்தனுடன் பாட்டு பாடியும் ஆட்டம் போட்டும் இருக்கிறார். அதன் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
This trio is on another level 🔥#Sivaangi #HarshaVardhan #Maanasi pic.twitter.com/H1i3toPEFU
— s• (@_shrads__) May 3, 2025