11 வயதில் அப்பாவின் மரணம்!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கதறி அழுத விஜே பிரியங்கா..

Thaman Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward Sep 07, 2023 03:30 AM GMT
Report

ஸ்டார் விஜய் டிவியின் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. மாகாபா ஆனந்துடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார்கள்.

பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்து தற்போது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதற்கான காரணம் என்னவென்று இதுவரை பிரியங்கா கூறவில்லை.

vj priyanka deshpande emotional

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசனை மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சமீபத்திய நிகழ்ச்சியில் எமோஷ்னலாக பேசி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

சனு மித்ரா என்ற போட்டியாளர் பாடி முடித்தப்பின் தன் தந்தை ஆடிஷனுக்கு அழைத்து வந்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது விபத்தில் இறந்தவிட்டதாக கூறி அனைவரையும் அழவைத்தார்.

விஜய் என் க்ரஷ், ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது!..சினிமாவில் இருந்த விலக காரணம் இதுதான்..நடிகை கௌசல்யா வெளிப்படை

விஜய் என் க்ரஷ், ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது!..சினிமாவில் இருந்த விலக காரணம் இதுதான்..நடிகை கௌசல்யா வெளிப்படை

இதனை நினைத்த பிரியங்கா என் தந்தை 11 வயதில் இழந்தேன். மாரடைப்பால் மரமடைந்த தந்தைக்கு பின் என் அம்மா தான் தந்தைப்போல் என்னையும் சகோதரனையும் பார்த்துக்கொண்டதாக கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதனை பார்த்த பலர் கண்ணீர் சிந்தினர். நடுவரான இசையமைப்பாளர் எஸ் தமனும் 9 வயதில் தன் தந்தையை இழந்ததாக கூறியும் சனு மித்ரா உனக்கு நாங்கள் எல்லோரும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.