சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணாவுக்கு கல்யாணம்!! எப்போ தெரியுமா..
சூப்பர் சிங்கர் அருணா
சூப்பர் சிங்கர் 9 சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை கைப்பற்றி 50 லட்சம் வீடு, 10 லட்சம் தொகையையும் பரிசாக பெற்றவர் தான் அருணா. இந்நிகழ்ச்சி பின் ஒருசில கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 60 லட்சம் ரூபாயில் கொடுத்த வீட்டினை இன்னும் வாங்கவில்லை என்று கூறி அதற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், 60 லட்சம் மதிப்புள்ள ஒரு பரிசு கொடுக்கிறார்கள் என்றால் அதற்காக அரசு வரி கொடுக்க வேண்டும்.
பரிசு கொடுப்பவர்கள் பெருந்தன்மையாக கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்கான வரியை செலுத்தினால் தான், அதை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும், அதுதான் அரசு ரூல்ஸ் அதனால் டாக்ஸ் கட்டிவிட்டு அந்த வீட்டிற்கு போவோம் என்று கூறியிருந்தார்.

கல்யாணம்
சமீபத்தில் சூப்பர் சிங்கர் அருணாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிர்ந்து வந்த நிலையில், இன்னும் 10 நாளில் அழகான துவக்கத்திற்கு கைகோர்த்து நடப்பதற்கு என்னவன் என்று உரிமையால் சொல்வதற்கு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அப்படியென்றால் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி அருணாவிற்கு திருமணம் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.