டாக்டர் பாடகி எல்லாத்தையும் விட்டுவிட்டு போட்டோஷூட்.. நடிகையாக ஆசைப்படும் சூப்பர் சிங்கர் பிரியங்கா

Super Singer Priyanka NK
By Edward Nov 07, 2022 12:30 PM GMT
Report
150 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் 2

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா என்கே. நிகழ்ச்சியில் பிரியங்கா பாடிய பாடல்களில் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் அவரின் குரலில் ரீகிரியேட் செய்தது தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்தாகவும் நிகழ்ச்சியில் பிரியங்கா கூறியிருந்தார். பாடகியை தான் பல் மருத்துவராகவும் பணியாற்றி வரும் பிரியங்கா தற்போது நடிகையாகவும் அறிமுகமாகவுள்ளார். பிசாசு 2 படத்தின் பிரமோஷனுக்காக எடுகப்படும் ஒரு வீடியோவில் பிரியங்கா பாடியும் நடித்தும் இருக்கிறாராம்.

போட்டோஷூட்

விரைவில் அந்த வீடியோவின் பிரமோ வெளியாகவுள்ளதாம். பாடகி, மருத்துவர் என்று இருந்து மக்கள் மனதை ஈர்த்து வந்த பிரியங்கா தற்போது போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வேற ரூட்டுக்கு போய்ட்டீங்க பிரியங்கா என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்.