48 வயதில் இரண்டாம் திருமணமா!! சுரேகா வாணிக்காக போராடும் மகள்..

Tamil Actress Actress
By Edward Feb 11, 2026 09:30 AM GMT
Report

சுரேகா வாணி

தென்னிந்திய சினிமாவில் அம்மா ரோலில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அப்படி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. அவருக்கு திருமணமாகி சுப்ரிதா என்ற மகள் இருக்கும் நிலையில் கணவர் 2019ல் இறந்தப்பின் தனியாக வாழ்ந்து வருகிறார்.

48 வயதில் இரண்டாம் திருமணமா!! சுரேகா வாணிக்காக போராடும் மகள்.. | Supritha Plans 2Nd Marriage Of Her Mother Surekha

2019ல் கணவர் இறந்தப்பின் தனிமையில் இருக்கிறார். குடும்பத்தினரின் விமர்சங்கள், ட்ரோல்களையும் சந்தித்தார். கணவர் இறந்தப்பின் சுரேகா மனமுடைந்தார். சுப்ரிதாவும் தற்போது நடிகையாக நடித்து வரும் நிலையில், தன்னுடைய அம்மாவின் இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

ஒன்றரை வருடமாக அம்மா, மேக்கப் போடவில்லை, ஒரு வாய்ப்புகூட வரவில்லை. வாய்ப்பு அம்மாவுக்கு வராதது வருத்தமளிக்கிறது. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். ஆனால் அம்மா மறுமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

48 வயதில் இரண்டாம் திருமணமா!! சுரேகா வாணிக்காக போராடும் மகள்.. | Supritha Plans 2Nd Marriage Of Her Mother Surekha

சுப்ரிதா

தன்னுடைய திருமணத்திற்கு முன் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க சுப்ரிதா முடிவு செய்துள்ளாராம். அமராவதிக்கி ஆஹ்வானம் படத்தின் மூலம் ஹீரோயினான சுப்ரிதா, பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் ஒருவரை, ஆதரபாக இருக்கும் ஒருவரை தேடுவதாகவும் கூறினார். மாமாவிடம் பேசியதாகவும் அவரும் சம்மதித்ததாகவும் சுப்ரிதா கூறினார்.