பாலா இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகும் 18 வயது நடிகை! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..
அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்கள்
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம், அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.
ET படத்தை தொடர்ந்து சூர்யா எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வராமல் இருந்தது.
ஆனால் சமீபத்தில் வெற்றிமாறனின் வாடிவாசல் பட டெஸ்ட் ஷூட்டில் சூர்யா கலந்து கொண்டார், அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் செம வைரலானது.

தொடங்கியது சூர்யா 41
இந்நிலையில் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள சூர்யா 41 ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி இப்படத்தில் பணியாற்றும் நட்சத்திரம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தில் 18 வயதே ஆன நடிகை க்ரித்தி ஷெட்டி நடிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.


சிம்பு தொகுத்து வழங்கி வரும் BB அல்டிமேட்-ன் பைனல்ஸ்! எப்போது தெரியுமா?