10 வருட பிரேக்!! திருமணமான நடிகைக்கு ரூட்டை போட்டு பிக்கப் செய்த சூர்யா..
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் பல கோடி செலவில் நடித்து வருகிறார்.
அதற்கான பல வேலைகள் நடைபெறும் இடையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் மனைவி ஜோதிகாவின் ஷூட்டிங்கிற்கு சென்று வருகிறார் சூர்யா.
இதற்கிடையில் தன்னுடைய அடுத்த படங்களின் பிளானையும் போட்டு வருகிறார்.
அப்படி சூரரை போற்று படத்திற்கு பின்
இயக்குனர் சுதா கொங்கரா - ஜிவி
பிரகாஷ் கூட்டணியில் சூர்யா43
நடக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி
வெளியானது.
ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க யார் என்ற கேள்வி எழுந்தது. பல நடிகைகள் பெயர் இடம்பெற்று வந்த நிலையில், பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
அதாவது ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறுவயதிலேயே நடிகர் பகத் பாசலை திருமணம் செய்து குழந்தை பெற்ற நடிகை நஸ்ரியா தானாம்.
10 ஆண்டுகள் தமிழில்
நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும்
நடிக்கவுள்ளது பலரின் எதிர்ப்பார்ப்பை
கூட்டியிருக்கிறது.
