வெளிவந்த சூர்யா 45 படப்பிடிப்பு புகைப்படம்.. மாஸ் சம்பவம் வைட்டிங்
Suriya
RJ Balaji
Tamil Actors
By Bhavya
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. அதை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவருடைய 45 - வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் துவங்கியது. ஆனால் சில காரணங்களால் அந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புகைப்படம்
இந்நிலையில், ஐதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 'சூர்யா 45' படப்பிடிப்பு துவங்கியுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஆர்.ஜே பாலாஜி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.