பாலா விஷயத்தில் சூர்யா சொன்னது பொய்யா? ஷாக்காகும் ரசிகர்கள்..

bala vetrimaran etharkumthuninthavan suirya ottortheatre
By Edward Mar 31, 2022 03:15 AM GMT
Report

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு எந்த படங்களில் முழு கவனம் செலுத்துவார் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதன் அடிப்பையில் சூர்யா வாடிவாசல் படத்திற்கான ப்ரீ ஷெட்டுல் ஷூட் சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் நடைபெற்றது.

இதையடுத்து கன்னியாகுமரியில் நடிகர் சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையும் ஆரம்பமானது. இந்நிலையில் சூர்யா - பாலா கூட்டணி சேர்ந்திருக்கும் சூர்யா 41 படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் பரிசீலனையில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சூர்யாவின் ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அடுத்த படமும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

சூர்யா இதற்கு முன் லைவ் வீடியோவில் பேசும்போது வாடிவாசல் மற்றும் பாலா படம் இரண்டும் தியேட்டரில் தான் வரும் என கூறி இருந்தார். அப்படி சூர்யா சொன்னது பொய்யா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.