ஐய்யோ இந்த இயக்குநரா? பயத்தில் ஓடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. குழப்பத்தில் சூர்யா?

bala keerthysuresh
By Edward Nov 20, 2021 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கலைஞர்களை உடலை வறுத்திக்கொண்டு மேக்கப்பே இல்லாமல் கொடூரமாக எடுக்க வைக்கும் இயக்குநராக இருந்தவர் இயக்குநர் பாலா. சூர்யாவை வைத்து அடுத்தடுத்த படங்களை ஆரம்பத்தில் எடுத்து பல ஹிட் விருது படங்களையும் கொடுத்து வந்தார் பாலா.

சமீபகாலமாக தன் கதைகளை யாரும் நடிக்க தயங்கி வருவதால் படவாய்ப்பில்லாமல் இருந்து வந்தார் பாலா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யா தன்னுடைய 2டி தயாரிப்பில் இயக்குநர் பாலாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

மூன்று மாதங்கள் மட்டும் பேசப்பட்ட இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷிடன் மூன்று மாதம் மொத்தமாக கால்ஷீட் கேட்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்கு காரணம் பாலா படம் முடித்து இயக்குநர் சிறுத்தை சிவா படத்தினை 2022 பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதால் தானாம்.

இந்நிலையில் பாலாவை பார்த்து கீர்த்தி சுரேஷ் பயப்படுவதாக சில தகவல் தெரிகிறது என்று பிரபல விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதற்கு காரணம் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், பாலா எப்படி ஷூட்டிங்கில் நடந்து கொள்கிறார்கள் என்பதை கீர்த்தி சுரேஷ் பார்த்து யோசித்து வருகிறாராம்.

கீர்த்திக்கு பாலா இயக்கத்தில் நடிக்க ஆசை. ஆனால் மூன்று மாதம் என்று கூறி 6 மாதமாக்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.