அஜித்துடன் மோத பயப்படும் பிரபல நடிகர்! டைட்டில் மட்டும் அப்படியொரு மாஸ்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சமீபத்தில் ஜெய் பீம் படத்தின் மூலம் இந்தியளவில் டிரெண்டிங் இடத்தை பிடிக்க வைத்தவர் நடிகர் சூர்யா. அமேசான் நிறுவனத்திடம் 4 படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த சூர்யா ஜெய் பீம் படத்தால் நல்ல விமர்சனமும் நல்ல வசூலும் பெற்று வருகிறார்.
ஜெய் பீம் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க சூர்யாவின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் வீடியோ ஒன்றும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு ஷாக் கொடுத்து நெருப்பில் எண்ணையை ஊற்றும் அளவிற்கு பற்ற வைத்துள்ளார். வருகிற பிப்ரவரி 4ல் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது என்று உறுதியான தகவல் வெளியானது. ஆனால் ஒருசிலரோ இப்படத்தினை ஏன் கிறிஸ்மஸ் நியூயர் என வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது.
ஒருசிலர் வலிமைக்கு எதிராக பொங்களுக்கு வெளியிடலாம் என கூறிய நிலையில் அப்படி முடியாத நிலையில் இருக்கிறது என்றுதான் கூறமுடியும். வலிமை படத்தினை சன் நிறுவனம் டெலிவிஷன் ரைட்ஸ் வாங்கியுள்ளது.
அதனால் இப்படத்தை தெலுங்கு முன்னணி படங்களுடன் போட்டியில் விட்டுள்ளனர். அதேபோல் எதர்க்கும் துணிந்தவன் படமும் சன் நிறுவனம் வாங்கியுள்ளதால் இரு படத்தினையும் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத சூழல் இருந்துள்ளது.
இப்படங்கள் இந்த ஒரு காரணம் இல்லாமல் இருந்தாலும் அஜித்திற்கு தான் தியேட்டர் நிர்வாகிகள் முன்னுரிமை கொடுத்தும் இருப்பார்கள் என்பதால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரியில் தான் வெளியாகும் என்று கூறியுள்ளனர் படக்குழுவினர்.